வாக்கிங் சென்ற பாஜக பிரமுகர் மர்ம மரணம்!

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 12:37 pm
balwadi-bjp-leader-manoj-thackeray-has-been-found-dead-in-a-field-in-madhya-pradesh

காலையில் நடைப்பயிற்சி சென்ற பாஜக பிரமுகர் மனோஜ் தாக்கரே மர்மமான முறையில் இறந்த சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், பார்வானி மாவட்டத்துக்குட்பட்ட பல்வாடி பகுதியின் பாஜக தலைவராக பொறுப்பு வகித்தவர் மனோஜ் தாக்கரே. இவர் தினமும் காலை வேளையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையிலும் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது,  திடீரென இறந்து கிடந்தார்.

வார்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த மர்ம மரணம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடந்த இடத்தில் ரத்தக்கறையுடனான பெரிய கல்லொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close