தலைநகரில் கனமழை: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 11:00 am
heavy-rainfall-in-delhi

தலைநகர் டெல்லியில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதல் அங்கு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அக்பர் சாலை, தௌலா கௌன் உள்ளிட்ட மாநகரின்  முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லிக்கு அருகே உள்ள குர்க்கான், நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட இடங்களிலும் மழைப் பெய்து வருகிறது.
இதனிடையே, போதிய வெளிச்சமின்மை காரணமாக, இன்று காலை டெல்லிக்கு வந்துசேர வேண்டிய 15 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close