கடும் பனிப்பொழிவு:மூடப்பட்ட ஜம்மு -ஸ்ரீநகர் நெடுஞ்சாலை!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 02:00 pm
avalanche-hits-jawahar-tunnel-in-j-k-shuts-down-srinagar-jammu-highway

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீரின் வடக்கு பகுதிகளில் இன்று காலையும் கடும் பனிப்பொழிவு நீடித்தது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அங்கு முக்கிய போக்குவரத்துத் தடமான ஜவஹர் சுரங்க வழிப்பாதையும் பனிச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஜம்மு - ஸ்ரீநகர்  தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.

லடாக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 4 பேரை தேடும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close