தீப்பிடித்து எரிந்த கார்கள்: மூன்று பேர் உடல் கருகி பலி!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 03:04 pm
three-person-s-burned-death-after-car-collision-in-delhi

தலைநகர் டெல்லியில் ஆனந்த் விகார் பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அதில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இரண்டு கார்களும் தீக்கிரையாகின.

டெல்லி, ஆனந்த் விகார்,  ஷாதரா பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் புதன்கிழமை நள்ளிரவு இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரண்டு கார்களும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீவிபத்தில் சிக்கி அதில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close