ஊழலை ஒழிக்க வேண்டுமென்ற அக்கறை உள்ளதா? ராகுலிடம் கேள்வி 

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 03:12 pm
is-congress-really-serious-about-fighting-corruption-leader-srikant-jena-to-ragul

ஊழலை  ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை உங்களுக்கு உண்மையிலேயே உள்ளதா? என்ற கேள்வி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரே எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஸா மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஸ்ரீகாந்த் சேனா, கட்சியிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டார். 
இந்த நிலையில் அவர் கட்சித் தலைவர் ராகுலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், " ஒடிஸா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கங்கள் விவகாரத்தில், ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேட்டில் மாநில காங்கிரஸ் தலைவருக்கு முக்கிய பங்குண்டு.

ஆனால், இதுகுறித்து நீங்கள் (ராகுல்) ஏன் கருத்து எதுவும் கூற மறுக்கிறீர்கள்?இந்த விஷயத்தில் நீங்கள் இரண்டை வேடம் போடுகிறீர்களா?

இத்தகைய தங்களின் நடவடிக்கைகளால் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை காங்கிரஸுக்கு உண்மையில் உள்ளதா? என்ற சந்தேதம் எழுகிறது" என அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close