ராஜ்நாத் சிங், மம்தா இடையே மூண்ட வார்த்தைப் போர்! 

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 09:21 am
west-bengal-mamata-banerjee-rajnath-singh-have-heated-exchange-after-amit-shah-rally

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே தொலைபேசியில் வார்த்தைப் போர் மூண்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம், கிழக்கு மிதுனபுரி மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.

கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள கந்தி நகரில் அமித் ஷா பங்கேற்ற பொதுக் கூட்டம் முடிந்து, பாஜக தொண்டர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது அவர்களுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் பாஜகவினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், அவை தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க  மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கந்தி நகரில் நடைபெற்ற வன்முறை  சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் எனவும் மம்தாவிடம் அவர் வலியுறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, "முதலில் நீங்கள் பாஜகவினரை கட்டுப்படுத்துங்கள். மாநிலத்தின் அமைதியை கெடுக்க வேண்டுமென அவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்" எனக் காட்டமாக பதிலளித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close