அசாம் குண்டுவெடிப்பு சம்பவம்- 9 பேருக்கு ஆயுள் தண்டனை

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Jan, 2019 02:43 pm
2008-assam-bombings-9-gets-life-term-jail

அசாம் மாநிலத்தில் 88 உயிர்களை பறித்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அசாம்  மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கைவன், பார்பேட்டா ஆகிய பகுதிகளில் கடந்த 2008 ஆண்டு அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 88 பேர் உயிரிழந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பலர்மீது குற்றம்சாட்டி கவுகாத்தி நகரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி  அபரேஷ் சக்ரபர்த்தி கடந்த 28-ம் தேதி தீர்ப்பளித்தார்.

போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 15 பேரை இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விபரம் 30-ம் தேதி தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி  அபரேஷ் சக்ரபர்த்தி உத்தரவிட்டார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close