உ.பி.: நினைவகங்கள் அமைப்பதில் முறைகேடு - 6 இடங்களில் அதிரடி சோதனை

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Jan, 2019 05:27 pm
ed-is-conducting-raids-at-6-locations-in-lucknow

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மாயாவதி ஆட்சிக்காலத்தில் , நினைவகங்கள் அமைப்பதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, 6 இடங்களில், அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 84 ஏக்கர் பரப்பளவில் 685 கோடி செலவில் பிரமாண்டமான வகையில் தலித் நினைவகம் கட்டப்பட்டது. அதில் அம்பேத்கார், கன்சிராம் ஆகியோரது சிலைகளுடன் மாயாவதிக்கும் சிலை நிறுவப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தை குறிக்கும் வகையில் 20 யானைகள் சிலையும் பூங்காவில் வைக்கப்பட்டது. இதுபோன்ற, நினைவகங்கள் அமைக்கப்பட்டதில், ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரையில், முறைகேடு நடைபெற்றதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில், 6 இடங்களில் அமலாக்கத்துறையினர், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close