மேற்குவங்க மாநில நிலவரம்: தலைமைச் செயலரிடம் கேட்டறிந்த ஆளுநர்!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 08:32 am
west-bengal-law-and-order-status-governor-speaks-to-chief-secretary

மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அந்த  மாநிலத்தின் தலைமைச் செயலாளர் ,டிஜிபி ஆகியோரிடம் கேட்டறிந்துள்ளதாக மாநில ஆளுநர் கே.என். திரிபாதி தெரிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு விரைந்தனர்.

வாரண்ட் இல்லாமல் வந்ததாகக் கூறி, சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் தடுத்து நிறுத்தினர். முதல்வர் மம்தா பானர்ஜியும் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே,  மேற்கு வங்க மாநில ஆட்சியை கவிழ்க்க, மத்திய அரசு திட்டமிடுவதாகக் கூறி, மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் மெட்ரோ சேனல் பகுதியில் நேற்றிரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து, மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கேட்டறிந்துள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில ஆளுநர் கே.என். திரிபாதி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close