சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்:  விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது உ.பி.  அரசு!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 12:18 pm
sit-to-probe-1984-kanpur-riots-uttar-pradesh-govt

இந்திரா காந்தி படுகொலையின் எதிரொலியாக, உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் 1984-இல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து மீண்டும் விசாரிக்க, உத்தரப் பிரதேச மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை இன்று அமைத்துள்ளது.

நீதி மற்றும் காவல் துறையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட இக்குழுவுக்கு மாநிலத்தின் முன்னாள் டிஜிபி அதுல் தலைமை வகிப்பார். இக்குழு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து விசாரித்து ஆறு மாதத்துக்குள் மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984 -இல், வடமாநிலங்களில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மன்ஜீத் சிங் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி, உத்தரப்பிரதேச மாநில அரசு தற்போது  சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close