ஒடிஸா: மத்திய அரசின் ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 02:24 pm
nitin-gadkari-launches-highway-and-port-projects-rs-6-000-crore-in-odisha

ஒடிஸா மாநிலத்தில் ரூ.6,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை மற்றும் துறைமுக திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.

ஒடிஸா மாநிலம், தேங்கனல் மாவட்டம், காமயா நகரில், ரூ.2,345 கோடி மதிப்பிலான மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அமைச்சர் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

இதேபோன்று,  ஜெகத்சிங்பூர் மாவட்டம், பிரதீப்பில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.3,600 கோடி மதிப்பிலான 7 துறைமுகங்கள் திட்டத்த்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், " கடந்த நான்கு ஆண்டுகளில் ஒடிஸா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அளவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது இம்மாநிலத்தில் 2014 -இல் 4,632 கி.மீ. நீளமாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள், தற்போது 9,426 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளன.

 மாநில அரசு ஒத்துழைத்தால், மேலும் 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது" என அமைச்சர் கட்கரி கூறினார்.

newstm.in
    

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close