கர்நாடகாவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி!

  அனிதா   | Last Modified : 09 Feb, 2019 01:58 pm
4-people-death-in-the-roof-of-the-house-fell-down

கர்நாடகாவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் சத்ரதுர்கா மாவட்டம், ராம ஜோகி ஹாலி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு இவரது வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து தூங்கி கொண்டிருந்த சந்திரசேகர் மற்றும் மனைவி, குழந்தைகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சந்திரசேகர் மற்றும் மகள் தேவிகாவுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close