காஷ்மீர்- தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Feb, 2019 12:42 pm
kashmir-encounter-underway-between-security-forces-and-terrorists-in-kulgam-district

காஷ்மீரில் இன்று காலையிலிருந்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலிருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்  இன்று காலை காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  அங்கு முகாமிட்டு அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து திடீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பதிலடி தரப்பட்டு வருகிறது.  இதனால் காலை முதல் மொபைல் இன்டர்நெட் சேவையும் அப்பகுதியில் தற்காலிகமாக முடக்கப் பட்டுள்ளது
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close