கும்பமேளா- 3 கோடி பேர் புனித நீராடல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Feb, 2019 07:26 pm
kumbamela-more-than-3-crore-devotees-took-bath-in-tiruveni-sangamam

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் "சாஹி ஸ்நான்" எனப்படும் புனித நீராடுதலில் இன்று 3 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடினர்.

பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் அர்த்த கும்பமேளா திருவிழா ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 

மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவதே புண்ணியம் இதனால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் சாதுக்ககள். கும்பமேளாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வி.ஐ.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்கு வசதியாக 4,000 சொகுசு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று சரஸ்வதி தேவி பிறந்த நாளை வசந்த பஞ்சமி என கொண்டாடப்படுகிறது. இதையோட்டி சாஹி ஸ்நான் எனும் புனித நீராடுதலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் சுமார் 3 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close