உ.பி.: கள்ளச்சாராய வழக்கில் 215 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 02:54 pm
hooch-tragedy-215-arrested-in-up

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயத்துக்கு இதுவரை 116 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 116-ஆக உயர்ந்துள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை உத்தரப்பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது.

மேலும்,  இச்சம்பவம் தொடர்பாக 14 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close