குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கை- மாநில அரசு பரிசீலிக்க முடிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Feb, 2019 02:55 pm
ashol-gehlot-government-will-consider-the-request-of-gujjars

குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.

கல்வி, வேலைவாய்ப்பில் குஜ்ஜார் சமூக மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என ராஜஸ்தானில் நான்காவது நாளாக தொடர்ந்து குஜ்ஜார் சமூக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குஜ்ஜார் சமூகத்தினருக்கு ஆதரவாக ராஜஸ்தானில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வந்த காவல்துறையினரும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். 

இந்நிலையில் குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close