செக் மோசடி வழக்கில் சிக்கிய ‛வீரப்பெண்மணி’ ரெஹானா பாத்திமாவுக்கு ஆலப்புழா மாவட்ட நீதிமன்றம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. இவர் அனில்குமார் என்பவரிம் இருந்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்துவதற்காக அனில்குமாரிடம் 2 லட்ச ரூபாய்க்கு ரெஹானா பாத்திமா செக் கொடுத்துள்ளார்.
அந்த செக்கை அனில்குமார் வங்கியில் செலுத்தியபோது போதிய பணம் இருப்பு இல்லாத காரணத்தால் செக் பவுன்ஸ் ஆனது. இது தொடர்பாக அனில்குமார் ஆலப்புழா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரெஹானா பாத்திமாவிற்கு 2 லட்சத்து 10 ரூபாய் அபராதமும் ஒரு நாள் சிறைவாசமும் வழங்கி தீர்ப்பளித்தார். இதையடுத்து ரஹெனா பாத்திமா நீதிமன்றத்தில் அபராத தொகையை கட்டினார். அப்போது நீதிபதி அவரை அன்றைய நாள் முழுவதும் நீதிமன்றத்தில் நிற்கும்படி உத்தரவிட்டார்.
newstm.in