கலெக்டரை மூளை இல்லாதவர் என ‌திட்டிய எம்எல்ஏ

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Feb, 2019 06:05 pm

mla-in-kerala-calls-woman-ias-officer-one-without-brains

தனக்கு நோட்டீஸ் அனுப்பிய பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என எம்எல்ஏ ஒருவர் அவதூறாக பேசியுள்ளார்.

இடுக்கி மாவட்டம் தேவிகுளம் உதவி-கலெக்டராக இருப்பவர் ரேணு ராஜ். இப்பகுதியின் முதல் பெண் உதவி-கலெக்டர் ஆவார். நீதிமன்ற உத்தரவை மீறி தேவிக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராஜேந்திரன், கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்த பணிகளை நிறுத்தும்படி, ரேணு ராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இது குறித்து ரேணு ராஜூடன் பொதுமக்கள் முன்னிலையில் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு கூடி இருந்தவர்களிடம் பேசிய ராஜேந்திரன், அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இது தான் முதல் முறை.

கட்டிட விதிமுறைகளை வகுக்க வேண்டியது பஞ்சாயத்து தான். இவர் இல்லை. விதிகள் பற்றி இன்னும் இவர் படிக்க வேண்டும். இவர் போன்றோரை நான் இதுவரை பார்த்ததில்லை. இது போன்று மூளை இல்லாதவர்களை இங்கு பணியமர்த்தி உள்ளனர் என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close