அரசியலில் குதித்த முன்னாள் தலைமைச் செயலாளர்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 11:49 am
former-tn-chief-secretary-rama-mohana-rao-joined-in-politics

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், ஆந்திர திரையுலகின் பிரபல நடிகரான பவண் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார். அவர், அக்கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராம மோகன ராவ் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தபோது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவரது சென்னை இல்லத்திலும், தலைமைச்  செயலகத்திலும்  வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, ஓர் அரசு உயரதிகாரியான அவர், வருமான வரிச் சோதனை தொடர்பாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பரபரப்புக்கு பெயர் போன ராம மோகன ராவ் தற்போது, ஆந்திர திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் தம்பியும், பிரபல நடிகருமான பவண் கல்யாணின் ஜன சேனா என்ற கட்சியில் இணைந்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close