டெல்லி: ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்வு

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 10:33 am
death-toll-to-17-in-hotel-fire-at-delhi

தலைநகர் டெல்லியில் பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை  4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஒரு பெண், குழந்தையும் அடங்குவர். ஹோட்டலின் பல தளங்களில் இருந்து இதுவரை 45 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close