ஜம்மு காஷ்மீர்- பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 03:28 pm
kashmir-bomb-blast-in-a-private-school

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் குண்டு வெடித்ததில் 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று பயங்கர  வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பள்ளியில் இருந்த பத்து மாணவர்கள் படுகாய‌மடைந்தனர்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close