சூரத்- பிரதமர் மோடியின் புகைப்படம் பதித்த புடவை அறிமுகம்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Feb, 2019 03:01 pm
surat-shop-launches-modi-saree-creates-a-buzz-among-women

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படம் பதித்த புடவை, அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜவுளிக்கு பெயர் போன சூரத் நகரில் அறிமுகமாகியுள்ள இந்த சேலைகள், மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் பதித்த, டீ-சர்ட்டுகளை பா.ஜ.க., இளைஞர்கள் அணிந்து வரும் நிலையில், தற்போது, மகளிர் அணிக்கு வசதியாக மோடி புடவையினை சூரத் ஜவுளி கடை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேலைகள்,  தாமரை மலர்கள் முன், மோடி ஒய்யாரமாக நின்றிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த வர்த்தகர்கள் ஏற்கனவே மாேடிக்கு ஆதரவாக பல வகைகளில் நுாதன பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது மாேடி படம் பதித்த சேலைகளின் வரவு, பா.ஜ.,வுக்கு ஆதரவான பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close