ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குண்டு வெடிப்பு- 15 வீரர்கள் படுகாயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Feb, 2019 04:32 pm
kashmir-15-crpf-jawans-injured-in-a-bomb-blast

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெடி குண்டு வெடித்ததில் 15 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் அத்து மீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இதில் சிஆர்பிஎப் படையின் 15 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் குண்டு வெடிப்பை தொடர்ந்து அவாந்திபுரா பகுதியிலுள்ள கேரரிப்புராவில் ராணுவ வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close