ராஜஸ்தான்- பன்றிக்காய்ச்சலுக்கு 125 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Feb, 2019 01:15 pm
six-more-die-of-swine-flu-in-rajasthan-toll-mounts-to-125

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில், ஜோத்பூர், கோடா, தவுசா மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு 4 பேர் பலியானார்கள். இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 125-ஐ தாண்டியது.

மேலும் 87 பேருக்கு புதிதாக இந்தநோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜோத்பூரில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 39 தினங்களில் ராஜஸ்தானில் 2 ஆயிரத்து 793 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள நாகௌர் மற்றும் பரத்பூர் பகுதிகளில் இன்று மேலும், 6 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை, ராஜஸ்தானில் மொத்தம் 125 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது,
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close