ஃபேஸ்புக்கில் நட்பாகி மூதாட்டியிடம் நகைகளை அபேஸ் செய்தவர் மீது போலீசில் புகார்!

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 03:35 pm
man-befriends-elderly-woman-on-facebook-robs-her-of-rs-8-lakh-later

ஃபேஸ்புக் மூலம் மூதாட்டியுடன் நட்பாகி, அவரது 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புணே நகருக்குட்பட்ட சந்தன் நகரைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருடன், வாலிபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் நட்பானார்.

நாளாடைவில் மூதாட்டியின் நம்பிக்கைக்கு பாத்திரமான அந்த நபர், ஒருநாள் அவரது அழைப்பின் பேரில், மூதாட்டியின் வீட்டுக்கு இரவு விருந்துக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புடைய நகைகளை திருடிக் கொண்டு அந்த வாலிபர் தலைமறைவானார்.

இதுகுறித்து  மூதாட்டி மகன் அளித்த புகாரின் பெயரில், சந்தன் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close