வீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதி அனுப்பிய கைதிகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Feb, 2019 05:29 pm
bihar-prisoners-contribute-rs-50-000-for-kin-of-pulwama-martyrs

பீஹாரில் உள்ள சிறையில் உள்ள கைதிகள் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக அனுப்பி வைத்துள்ளனர்.

பீஹாரில் உள்ள கோபால்கன்ஞ் சிறைச்சாலையில் 30 பெண்கள் உள்பட 750 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து அவர்களுக்கிடையே நிதி திரட்டி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாயை வரைவோலையாக பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அந்தக் கைதிகள் அனைவரும் இணைந்து,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அதில் தேவைப்பட்டால் தங்களையும் போர் முனையில் பணியாற்றும் வகையில் படையணியில் சேர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போர் முனையில் தாங்கள் இறந்தால் தங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்க அது வாய்ப்பாக அமையும் என்றும் அந்த கடிதத்தில் அந்தக் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close