பீஹார் சுகாதாரத்துறையில் இளநிலை பொறியாளர் பதவி- நடிகை சன்னிலியோன் பெயர் முதலிடம்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Feb, 2019 03:18 pm
sunny-leone-topper-in-bihar-public-health-engineering-department-s-recruitment-list

பீஹாரில் சுகாதாரத்துறையில் இளநிலை பொறியாளர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களை, தகுதி அடிப்படையில் வரிசைப்படுத்தி அம்மாநில அரசுத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்  பெயர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

பொது சுகாதார கட்டமைப்புத்துறையில் 214 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்காக, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் கல்வித் தகுதி மற்றும் துறை சார்ந்த அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை வரிசைப் படுத்தி, அரசுத்துறை இணைய தளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் முதல் பெயராக 98.50 புள்ளிகளுடன் சன்னி லியோன் பெயர் இடம்பெற்றுள்ளது. இது இணைய தளத்தில் யாரோ விஷமிகள் வேண்டுமென்றே செய்த குறும்பு என்று பீகார் அமைச்சர் வினோத் நாராயணன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close