உத்தரப்பிரதேசம்- சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி பங்கீடு அறிவிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Feb, 2019 05:05 pm
mayawati-akhilesh-yadav-announce-seat-sharing-details-in-up

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதியிலும்,  பகுஜன் சமாஜ் 38 தொகுதியிலும் போட்டியிடும் என மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி- பகுஜன்சமாஜ் தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ் வின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. இந்நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வாரணாசி மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநித்தில் 75 இடங்களில் அகிலேஷ், மாயாவதி கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

மீதமுள்ள 5 இடங்களில் 3 இடத்தில் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சி போட்டியிடவுள்ளது. ‌அமெதி மற்றும் ராபெரேலி தொகுதிகளில் இந்த கூட்டணி போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close