கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Feb, 2019 12:26 pm
goa-cm-manohar-parrikar-hospitalised

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில்,  மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக அவர், கோவாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. 48 மணிநேரம் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிக்கரின் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று மூத்த அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இனி அச்சப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சர்தேசாய் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close