பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Feb, 2019 01:10 pm
pakistan-violates-ceasefire-along-loc-in-j-k-s-nowshera

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. ரஜோரி மாவட்டம் நவ்ஷெரா மண்டலத்திற்கு உட்பட்ட காணம் பகுதி அருகே அமைந்துள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் நேற்று இரவு திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விரட்டி அடித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 38 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு, இதற்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 

இந்த தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் 150-க்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வரும் திங்கள்கிழமை ஜம்மு,-காஷ்மீர் மாநிலத்திற்கு நேரு கால ஆட்சியின் போது நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி வழங்கப்பட்ட சலுகைக்கு காரணமான சட்டப்பிரவு 370 மற்றும் 35 குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்க உள்ளது.

அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதிரடியாக குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close