லஞ்சம் கேட்ட தாசில்தாரின் வாகனத்தில் எருமை மாட்டை கட்டி அசத்திய விவசாயி!

  Newstm Desk   | Last Modified : 24 Feb, 2019 03:00 pm
madhya-pradesh-a-farmer-tied-his-buffalo-to-the-vehicle-of-tehsildar

நில விவகாரம் தொடர்பான வழக்கை முடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தாரின் வாகனத்தில், விவசாயி ஒருவர் தனது எருமை மாட்டை கட்டிவிட்ட அசத்தல் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், திகம்கர்க் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை சட்டரீதியாக தீர்த்து, நிலத்தின் உரிமையை விவசாயி பெயருக்கு மாற்றி எழுத, அந்தப் பகுதியின் தாசில்தாரான சுனில் வர்மா, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயி, தனது எருமை மாட்டை, தாசில்தாரின் வாகனத்தின் முன்பகுதியில் கட்டிவிட்டு தமது எதிர்ப்பை காட்டியுள்ளார்.

அரசு அதிகாரிக்கு எதிரான விவசாயியின் இந்தத் தைரியமான செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதேசமயம், இதுதொடர்பாக விவசாயி உரிய புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close