கெஜ்ரிவால் உண்ணாவிரத  அறிவிப்புக்கு உண்மையான காரணம் என்ன?: ஷீலா தீட்சித் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 24 Feb, 2019 03:59 pm
sheila-dikshit-questioned-to-delhi-cm-arvind-kejriwal

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது உண்ணாவிரதம் அறிவித்துள்ளதற்கு உண்மையான காரணம் என்னவென்று அந்த மாநில முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித் கேள்வியெழுப்பியுள்ளார்.

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி, வரும் மார்ச் 1- ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு குறித்து டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறும்போது, " டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதாக இருந்தால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போதுதான் அது சாத்தியமாகும். அதாவது அப்போதுதான் இதுதொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்.

தற்போதுதான் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் கெஜ்ரிவால் உண்ணாவிரதப் போராட்டத்தை ஏன் அறிவித்துள்ளார் எனப் புரியவில்லை! இதற்கு உண்மையான காரணம் என்ன?" என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close