எம்ஜிஆரின் நினைவு இல்லம் நாளை திறப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Feb, 2019 12:22 pm
guv-to-open-mgr-memorial-tomorrow

கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு இல்லத்தை நாளை ஆளுநர் சதாசிவம் திறந்து வைக்கிறார். 

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் ஆகும். சிறுவயதில் இங்கு எம்ஜிஆர் குடும்பத்தோடு வசித்தார். 

இந்த வீட்டை எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 2 முறை பராமரித்தார். அதன் பின்னர் அந்த வீட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீடு சிதிலமடைந்து குடியிருக்க முடியாமல் இருந்தது.

இது குறித்து அறிந்த சென்னை முன்னாள் மேயரும், எம்ஜிஆர் பேரவைத்தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டை பார்வையிட்டார். எம்ஜிஆர் வசித்த வீட்டை புனரமைக்க முடிவு செய்தார். 

அதன்படி 50 லட்சம் ரூபாய் செலவில் சிதிலமடைந்த வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி எம்ஜிஆர் நினைவு இல்லமாக அமைக்கப்பட்டது. எம்ஜிஆரின் நினைவு இல்லத்திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த இல்லத்தை கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close