காஷ்மீர்- பூஞ்ச்- ராவல்கோட் இடையிலான பேருந்து போக்குவரத்து தொடக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Feb, 2019 02:31 pm
cross-loc-poonch-rawalkote-bus-service-resumes-today

புல்வாமா தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காஷ்மீரின் பூஞ்ச்- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ராவல்கோட் இடையிலான போக்குவரத்து சேவை, இன்று மீண்டும் தொடங்கியது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இக்கொடூர தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ் தானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த தாக்குதல் காரணமாக காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட் இடையிலான பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close