இலங்கை பிரதமர் ரணில் திருப்பதியில் சாமி தரிசனம்!

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 11:52 am
srilankan-president-in-thiruppathi

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று அதிகாலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனத்திற்காக நேற்று மாலை திருமலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தமது மனைவி மற்றும் இலங்கை எம்பிக்கள் குழுவினருடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.

திருமலையில் உள்ள விஐபி கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் நேற்றிரவு தங்கியிருந்த ரணில் விக்ரமசிங்கே, இன்று அதிகாலை சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு சென்றார்.

கோவில் முன்வாசல் வழியாக சென்ற அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். தொடர்ந்து சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு மலையானை தரிசிக்க அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ரணில் விக்ரமசிங்கே தம்பதிக்கு வேத ஆசி வழங்கினர். அதைத்தொடர்ந்து அவர் கோவில் வளாகத்தில் உள்ள துலாபாரத்திலும் அமர்ந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close