தீவிரவாதிகளை சுட்டுப் பொசுக்கிய பாதுகாப்புப்படையினர்!

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 12:18 pm
jammu-and-kashmir-two-terrorist-killed-in-encounter

ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியையொட்டி அமைந்துள்ள பட்காம், ஹண்ட்வாரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இப்பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று அதிகாலை முதல், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி்ச் சூடு நடைபெற்று வருகிறது.. இதில் தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

முன்னதாக. தீவிரவாதிகள் சுட்டதில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவர் மற்றும் ஜம்மு -காஷ்மீர் மாநில போலீஸார் இருவர் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close