எல்லையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தான்

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 12:50 pm
jammu-and-kashmir-pak-ceasefire

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில், கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

இந்தியாவுடன் அமைதியையே விரும்புவதாக ஒரு புறம் கூறிக்கொண்டு, மறுபுறம்  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு ஊக்குவித்து வருகின்றது.

தொடர்ந்து நான்காவது நாளாக, இன்று காலை 10 மணியளவில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் அமைந்துள்ள ரஜெளரி மாவட்டத்துக்குட்பட்ட நவ்ஷெரா மற்றும் சுந்தர்பானி பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதுடன், குடியிருப்புப் பகுதிகளின் மீது கையெறி குண்டுகளை  வீசியும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இத்தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close