எல்லையில் தொல்லை கொடுத்த தீவிரவாதி சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 08:18 am
one-terrorist-has-been-gunned-down-by-security-forces-in-handwara

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலும், தீவிரவாதிகளின் தொல்லையும தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

ஹந்த்வாரா மாவட்டத்துக்குட்பட்ட கர்ல்கண்ட் எனுமிடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

சில நிமிடங்கள் நீடித்த இச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close