கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தொழிலதிபரின் ரூ.100 கோடி பங்களா வெடிவைத்து தகர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 10:21 pm
nirav-modi-s-rs-100-crore-seaside-luxury-bungalow-demolished

மும்பையில் உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதையடுத்து வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல், தொழிலதிபர் நீரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்ஷியும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.

இதனிடையே,.மும்பையின் புறநகர் பகுதியான அலிபாக்கில் கடற்கரையை நோக்கி அமைந்திருந்த நீரவ் மோடியின் சொகுசு பங்களா விதிகளை மீறி கட்டப்பட்டது தெரிய வந்தது.

அதாவது கடற்கரை ஒழுங்குமுறை சட்ட விதிகள் மற்றும் கட்டடங்களுக்கான மகாராஷ்டிர மாநில அரசின் விதிகளை மீறி இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

இதையடுத்து, நிர்வாகரீதியான பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு இன்று, 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட, நீரவ் மோடியின் சொகுசு பங்களா வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ராய்காட் மாவட்ட ஆட்சியர் விஜய் சூர்யவன்சியின் உத்தரவின் பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close