ஆந்திர மாநிலத்திலன் மூன்று வெவ்வேறு இடங்களில் சுமார் 20லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் கடப்பாவில் இருந்து புரோடுடூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் விஸ்வநாதபுரம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் 4 லட்சம் ரூபாயும், கடப்பா மாவட்டத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவைகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.