ஜம்மு-காஷ்மீரில் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 08:37 pm
it-raids-across-jammu-kashmir

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ஆய்வில் கிடைத்த தகவலை தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். வீடுகள், அலுவலகங்கள் ஹோட்டல்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. ஜம்முவில் பல தொழிலதிபர்கள் வீடுகளிலும், தலைநகர் ஸ்ரீநகரில் ஒரு தொழிலதிபரின் வீடு மற்றும் ஓட்டலில் சோதனை நடைபெற்றது. 

அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் மோப்ப நாய்களை கொண்டு சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள், ஜம்மு காஷ்மீரில் ஆய்வொன்றை நடத்தி பல்வேறு தொழிலதிபர்கள் குறித்து அறிக்கை தயார் செய்ததாக தெரிய வந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close