மும்பை: நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு; 29 பேர் காயம்

  டேவிட்   | Last Modified : 15 Mar, 2019 08:02 am
mumbai-cst-bridge-collapsed-5-dead

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் நேற்று இரவு (வியாழக்கிழமை) இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

மகாராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டடத்தையும், சதிரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும் இணைக்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று (வியாழக்கிழமை) இரவு சுமார் இடிந்து விழுந்ததில், பாலத்தின் கீழே சென்றுகொண்டிருந்த சில வாகனங்கள் மீது பாலத்தின் இடிபாடுகள் விழுந்தன. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close