மும்பை நடைமேம்பால விபத்து: பிரதமர் இரங்கல் !

  டேவிட்   | Last Modified : 15 Mar, 2019 08:05 am
mumbai-cst-bridge-collapse-condolence-by-modi

மும்பை நடைமேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் நேற்று இரவு (வியாழக்கிழமை) இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 29 பேரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த கோர விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பை நடைமேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close