அக்கா இறந்துவிட்டதாக கூறி இன்சூரன்ஸ் பணத்தை அபேஸ் செய்த கில்லாடி தம்பி!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 07:24 pm
man-arrested-for-pulling-off-fraud-to-claim-insurance-benefits

உயிருடன் இருக்கும் தமது அக்காவை இறந்துவிட்டதாகக் கூறி, எல்ஐசியில் இன்சூரன்ஸ் பணத்தை பெற்ற கில்லாடி தம்பியையும், அவரது நண்பரையும் மும்பை போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மஹாஸ்வி தாலுக்காவை சேர்ந்தவர் ரங்குபாய் ஜெகன்நாத். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) காப்பீட்டுத் திட்டம் ஒன்றில் சேர்ந்த இவர், அந்த பாலிசிக்கான சட்டரீதியான உரிமையாளராக (நாமினி) தனது தம்பி, பிரகாஷ் ஸ்ரீபதி மந்திரை குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பிரகாஷும், அவரது நண்பருமான அஜயும் இணைந்து, ரங்குபாய் இறந்துவிட்டதாகக் கூறி, போலியாக இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து, நாமினி என்ற முறையில் காப்பீட்டுத் தொகையை பெற்றுள்ளனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக, இந்த மோசடி நடைபெற்ற சில நாட்களிலேயே,  தமது பாலிசி நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக, ரங்குபாய் எல்ஐசி அலுவலகம் சென்றுள்ளார். ஏற்கெனவே இறந்துவிட்டதாக சான்றிதழ் சமர்பிக்கப்பட்ட பாலிசிதாரரான ரங்குபாயை பார்த்ததும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், ரங்குபாயின் சகோதரர் முறைகேடாக காப்பீட்டுத் தொகையை பெற்றுள்ளதை உணர்ந்த அதிகாரிகள் போலீஸில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் அஜயை போலீஸார் கைது செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close