மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Mar, 2019 03:40 pm
pm-modi-pays-tributes-to-goa-cm-in-panaji

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர், நேற்று மாலை காலமானார்.  

மனோகர் பாரிக்கர் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட உள்ளது.

அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவா சென்று மனோகர் பாரிக்கர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஸ்மிதி ஈரானி, பீஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close