ஹர்திக் பட்டேலை எதிர்த்து பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி போட்டி?

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Mar, 2019 01:51 pm
cricketer-ravindra-jadeja-s-wife-rivaba-eyes-bjp-ticket-from-gujarat-s-jamnagar

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்காக பாடுபட்டு வரும் ஹர்திக் பட்டேல், கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகளை சுயேட்சையாக தோற்கடித்தவர். 

ஆனால் தற்போது அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் குஜராத் மாநிலம் ஜாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜாம்நகர் தொகுதியில் ஹர்திக் பட்டேலை எதிர்த்து பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஹர்திக் பட்டேல் தனிப்பட்ட முறையில் அந்த தொகுதியில் செல்வாக்கு உடையவர்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிடுவதால் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை இறக்க திட்டமிட்டே ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக களமிறக்குகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close