பாஜக அரசு தப்புமா..? கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 04:14 pm
we-are-going-for-the-floor-test-tomorrow-goa-chief-minister-pramod-sawant

கோவாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு, மாநில சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது.

கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோயால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் நேற்றிரவு பொறுப்பேற்றுக் கொண்டார். தமது தலைமையிலான பாஜக அரசு, மாநில சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அரசில் கூட்டணி கட்சிகளான கோவா பார்வர்டை சேர்ந்த விஜய் சர்தேசாய், மகாராஷ்டிரவாதி கோமந்திக் கட்சியின் சுதின் தவாலிங்கர் ஆகியோர் துணை முதல்வராக பொறுப்பு வகிப்பார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 40 எம்எல்ஏக்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் 14 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இருப்பினும், 12 எம்எல்ஏக்களை மட்டும் கொண்டுள்ள பாஜக,கோவா பார்வர்டு, மகாராஷ்டிரவாதி கோமந்தி ஆகிய கட்சிகளின் தலா 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பாரிக்கரின் மறைவையடுத்து, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சி என்ற முறையில், தங்களை ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோவா மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் கோரியிருந்தது. இதையடுத்து மாநிலப் பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close