போலீஸ் கண்காணிப்பில் ஆசிரியர் பலி; காஷ்மீரில் வன்முறை!

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 07:11 pm
violence-in-srinagar-school-teacher-dies-in-police-custody

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், காவல்துறை கைது செய்து கண்காணிப்பில் வைத்திருந்த ஒரு பள்ளி ஆசிரியர் பலியானதை தொடர்ந்து, அவந்திபோராவில் கலவரம் ஏற்பட்டது. இதனால், கடைகள் அடைக்கப்பட்டு, மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பள்ளி ஆசிரியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல்துறை கண்காணிப்பில் இருந்த போது, அவர் பலியானதாக கூறப்படுகிறது. 28 வயதான ரிஸ்வான் ஆசாத் பண்டித், தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் இறந்த செய்தி, ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள அவந்திபோரா என்ற ஊருக்கு சென்றவுடன், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவந்திபோராவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சிறிது நேரத்திலேயே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்புக்காக, அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அவந்திபோரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close