மேற்கு வங்கம்: வேட்பாளர்களை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Mar, 2019 01:14 pm
west-bengal-cpi-m-announces-candidates-for-38-seats

மேற்கு வங்க மாநிலத்தில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக  தேர்தல் நடைபெற உள்ளதுது. 

இங்கு திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற முயற்சி மேற்கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் மாநில தலைமை அதனை விரும்பவில்லை. திரிணாமுல் இங்கு தனியாகவே களமிறங்குகிறது.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களை இன்று வெளியிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close