நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்- பிரியங்கா ஆவேசம்

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Mar, 2019 04:16 pm
we-are-not-afraid-priyanka-gandhi-hits-back-after-pm-s-blog

நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம், மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தின் பதவி ஆசை காரணமாக ஒட்டுமொத்த தேசமும் பாதிப்படைவதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முன், மக்கள் நன்றாக சிந்தக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து வாரணாசியில் பிரசாரம் செய்து வரும் பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது இதற்கு பதிலளித்த அவர்,  நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். பிரதமர் மோடி நினைப்பது போல் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று பதிலளித்தார்.

கடந்த 5 வருடங்களில் பாஜக அரசு அனைத்து துறைகளையும் சீரழித்து விட்டது. ஆட்சிக்கு வந்த பின் மாறி விடும் இவர்கள் குணம் மக்களை தவறான திசையில் வழிநடத்தி சென்றது. இவர்களை எதிர்பவர்கள் பயப்பட வேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம் என்றார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close